கல்விக்கருத்தரங்கு- 2018

DeepGlobal Srilanka அனுசரணையுடன் க.பொ.த(சா/த)-2018 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் துரித மீட்டல் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில் வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களுக்கான செயலமர்வுகள் இடம்பெற்றது.

குறிஞ்சியில் கல்விச்சேவை

DeepGlobal Srilanka இன் ஏற்பாட்டில் லிந்துல டிக்கோயா பிரதேசத்தில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தவருடம் க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்கள் இதில் பங்குபற்றி பயனடைந்தனர். #DeepGlobal இன் இக் கல்விச்சேவையை கல்வியலாளர்கள் பெரிதும் பாராட்டி ஆதரவும் ஊக்கமும் அழித்ததுடன் தொடர்ந்தும் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்களையும் விடுத்திருந்தனர்.

வடமராட்சிக் கிழக்கில் கருத்தரங்கு

#DeepGlobal(ஆளவாழ்தல்) அமைப்பின் அனுசரணையுடன் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலயதில் க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான பரிட்சை வழிகாட்டி துரித மீட்டல் கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்குகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனது ஒவ்வொரு வருடமும் க.பொ.த(சா/த), க.பொ.த(உ/த) மாணவர்களுக்கான செயலமர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தலைமன்னாரில் கல்விக் கருத்தரங்கு

#DeepGlobal Srilanka இன் அனுசரணையில் தலைமன்னார் பேசாலை பாத்திமாக் கால்லூரி மற்றும் ஐயனார்புரத்தில் நடைபெற்ற க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான வரலாறு பாடத்திற்கான பரீட்சை துரித பரீட்சை வழிகாட்டி உதவிக்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 90 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். அதிலிருந்து சில காட்சிகள்…

க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்கு

#DeepGlobal (ஆள வாழ்தல்) நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார், நுவரெலியா மாவட்டங்களில் க.பொ.த(சா/த)-2018 பரிட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. இதற்காக மேற்படி மாவட்டத்தின் கல்விபுல அதிகாரிகளின் பூரண ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கப் பெற்றது. அதற்காக உதவிய கல்வி அதிகாரிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதிலிருந்து சில காட்சிகள்…

உயர்தர பிரிவு மாணவர்களுக்கான செயலமர்வுகள்

இந்த வருடம் க.பொ.த(உ/த) பிரிவு மாணவர்களுக்கான பரீட்சைக்கு தயார்ப்படுத்தலுக்கான முன்னோடி செயலமர்வானது Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 05-07-2018 தொடக்கம் 14-07-2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இச் செயலமர்வில் மருதங்கேணிக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளான யா/உடுத்துறை ம.வி, யா/ஆழியவளை சி.சி.த.க.வி, யா/அம்பன் அ.மி.த.க.வி மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழ், இந்து நாகரீகம், வரலாறு, இணைந்த கணிதம், இரசாயனவியல், பெளதீகவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்(ICT) ஆகிய பாடங்களுக்கான செயலமர்வுகள் யாழ் மாவட்டத்திலுள்ள பிரபலமான வளவாளர்களால் நடத்தப்பட்டது.

தாதியர் உதவியாளர் கருத்தரங்கு

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் லாவா கெயார் நிறுவனத்தில் தாதியர் உதவியாளர் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வளவாளர்களாக திரு ஜே.எஸ்.செல்வநாயகம் ( ஆளுநருக்கான பிரதிச் செயலாளர்- வடமாகாணம்), திரு வே.புவனேந்திரராசா (அதிபர், யா/உடுத்துறை ம.வி), திரு P.ஜேசுரட்ணம் (Deep Global- UK/Srilanka) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மேலும் யாழ் லாவா கெயார் நிறுவனத்தினூடாக தாதி உதவியாளர் பயிற்சியினை பெறும் மாணவர்களும் ஏனைய மாணவர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர்.

“தீவகம்” நூல் வெளியீட்டு விழா

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரித்தானியா- யாழ் தீவக ஒன்றியத்தினால் “தீவகம்” எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலகவியலாளர் திரு. என்.செல்வராஜா அவர்களின் படைப்பான இந்நூலில் யாழ்ப்பாணத்தின் ஏழு தீவுகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது. 10-06-2018(ஞாயிற்றுக்கிழமை) பி.ப 03:00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கெளரவ முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், வைத்தியர்கள்,

வற்றாப்பளை கண்ணகி அம்மனில் மருத்துவ முகாம்

வைத்தியர் திரு. யதுநந்தனின் லாவா கெயார் அமைப்பினால் Deep Global நிறுவனத்தின் அனுசரணையூடன் முல்லைத்தீவூ வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு பக்த அடியார்களின் நலனுக்காக மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் அடியார்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மருத்துவ தாதியர் உதவியாளர் பயிற்சிநெறி

Deep Global நிறுவனத்தின் அனுசரணையூடன் வடமாகாணத்தில் 30 மாணவர்களுக்கான மருத்துவ தாதியர் பயிற்சிநெறி வழங்கப்பட்டு வருகின்றது. இப் பயிற்சிநெறியில் வடமாகாணத்திலிருந்து க.பொ.த(சா/த) மற்றும் க.பொ.த(உ/த) கற்று வெளியேறிய தெரிவூசெய்யப்பட்ட மாணவர்களுகளுக்கு வழங்ப்படுகின்றது. பங்குபற்றுகின்ற மாணவர்கள் விபரம்… 1.Miss M. Maheswaran                 -Karavedddy 2.Miss T Nagarasa                         -Karavedddy 3.Miss M Mahenthiran