2020 இல் தொடரும் கல்விச் சேவை

Deep Global தொண்டு நிறுவனத்தின் கல்வி சேவைகளில் ஒன்றாக தரம் -05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சி வகுப்புகள் 08-02-2020 அன்று நடைபெற்றது. அதிலிருந்து சில பதிவுகள்…

தீவகத்தில் கல்விச் சேவை /Education in Island

யாழ் தீவக வலய பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்காக Deep Global தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பல கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யா/வேலணை தெற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 மாணவர்களுக்கான செயலமர்வுகள் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்றது. இதன் மூலம் மாணவர்கள் தமது இடர்பாடுகளை குறைத்து பல நன்மைகளை பெற்றுக்கொண்டார்கள். இச்செயலமர்வுகளை நடத்துவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கிய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்

முல்லையில் கல்வி

Deep Global அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை RCTM பாடசாலையில் க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் நவம்பர் மாதம் 22-26 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இதில் 30 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதிலிருது சில காட்சிகள்…

மட்டக்களப்பு மேற்கில் உதிக்கும் கல்வி

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆலோசனை, மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது. அதன் பதிவுகள் சில…

மலையகத்தில் கல்வி மறுமலர்ச்சிக்கான தடம்

Deep Global தொண்டு நிறுவனத்தினால் வடக்கு, கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகள் போன்று மலையகத்தில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி நிலை மேல்நிலைக்கு கொண்டுவருவதற்கான அடித்தடம் பதிக்கப்பட்டுள்ளது. Deep Global நிறுவனத்தினால் ஏற்கனவே மலையகத்தில் கல்வி கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் Deep Global இன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மலையக கல்வி நடவடிக்கையை மேம்படுத்த முதற்கட்டமாக ஒருதொகுதி புத்திஜீவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மலையகத்தை சேர்ந்த 25 அதிபர்களும் ஏனைய சில

Deep Global Income & Expenditure-2018

ஆழவாழ்தல் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை (வைகாசி 31 வரையானது)

கிழக்கில் கல்விக்கான எமது தடம்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி வலயத்தில் நடைபெற்ற ஆள வாழ்தல் அமைப்பின் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கான வினாத் தாள்கள் விநியோத்தில் மேற்படி கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட போது * மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் க.பொ.த(சா/த) தமிழ்பாட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்…

தீவகத்தில் கல்விச்சேவை

யாழ் மாவட்டத்தில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவில் Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் தரம்- 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்தும் இக்கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது. 18-05-2019 அன்று எழுவை தீவில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் செயலமர்வு நடைபெறும்போது… எழுவை தீவில் நடைபெறும் தரம் 05 புலமைப்பரிசில் செயலமர்வினை ஆளுநரின் உதவி செயலாளர் பார்வையிடுகின்றார்.   புளியங்கூடல், ஊர்காவற்றுறை செயலமர்வு எழுவைதீவில் 17-08-2019 அன்று தரம் 11 மாணவர்களுக்கான கணித பாட பரீட்சை

கிழக்கில் கல்விச் சேவை

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் – 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் கருத்தரங்கு நடை பெற்றது. இதில் பல மாணவர்கள் கலந்துகொண்டதுடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினதும் பெரும் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது.

Donation from UKTSU & KYO

We are happy to announce that UKTSU (United Kingdom Tamil Students Union) along with KYO (Karai Youth Organisation) donated £2000 to DEEP Global in Dec 2018. Deep Global சமூக தன்னார்வ தொண்டுநிறுவனமானது உலக தமிழர்களின் சமூக,பொருளாதார,கலாசார,பண்பாட்டு தேவைகளை கண்டறிந்து பல உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இதனை உணர்ந்து பல நிறுவனங்களும் Deep Global இன் சேவைக்கு உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் “ஐக்கிய