குறிஞ்சியில் ஆழ வாழ்தலின் கல்விப் பணிகள்

Deep Global Srilanka (ஆள வாழ்தல்) கொண்டு நிறுவனத்தினால் மலையக பாடசாலையின் க.பொ.த (சா/த) பரீட்சை – 2022(2023) இற்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் செயலட்டைகள் வழங்கப்பட்டது. அ

அம்பாறையில் ஆழ வாழ்தலின் கல்விப்பணிகள்

“ஆள வாழ்தல்” (Deep Global) அமைப்பு மேற்கொண்டு வருகின்ற கல்விப் பணியின் ஓர் அம்சமாக இம்முறை (2023) க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தின் கஷ்ட பிரதேச பாடசாலைகளான தேவகிராமம் (அளிக்கம்பை) புனித சேவியர் வித்தியாலயம், கண்ணகி கிராமம் கண்ணகி வித்தியாலயம், பனங்காடு பாசுபதேஸ்வரா வித்தியாலயம், ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 121 மாணவர்களுக்கான தமிழ், கணிதம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குரிய மாதிரி வினாப்பத்திரங்கள்

மூன்று நவீன திறன் வகுப்பறைகள் வழங்கல்

21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கு தகவல் தெpழில்நுட்ப அறிவு முக்கியமானது. இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் தகவல் தொழில் நுட்பத்தினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டப்படுகின்றது. அந்த வகையில் Deep Global Srilanka(ஆழ வாழ்தல்) தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் மூன்று பாடசாலைகளுக்கு தலா ஒவ்பொரு திறன் வகுப்பறைகள்(Smart Class Rooms) அபிவிருத்தி செய்யப்பட்டு 23-03-2023 அன்று வழங்கப்பட்டது.

மன்னாரில் கல்வித்தடம் பதித்து ஆழ வாழ்தல்

Deep Global Srilanka (ஆழ வாழ்தல்) தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார் அல் அஸார் தேசிய பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சை – 2022 (2023) வழிகாட்டல் கருத்தரங்கு 11-05-2023 அன்று நடைபெற்றது. இதில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

ஆழ வாழ்தலின் கல்விச் செயற்பாடு

Deep Global Srilanka (ஆள வாழ்தல்) தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இளவாலை புனித ஹென்றீஸ் கல்லூரியில் க.பொ.த (சா/த) பரீட்சை – 2022 (2023) வழிகாட்டல் கருத்தரங்கு 09-05-2023 அன்று நடைபெற்றது. இச்செயலமர்வில் யாழ் மாவட்டத்தின் பிரபலமான வளவாளர்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவான மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

கரவெட்டியில் ஆளவாழ்தலின் கல்விப்பணி

ஆளவாழ்தல்(Deep Global) அமைப்பின் அனுசரணையில் கரவெட்டி தாமோதர வித்தியாலய தரம்-05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை தயார்ப்படுத்தல் பயிற்சி வகுப்புகளும் பரீட்சையும் துறைசார்ந்த வளவாளர்களினால் நடத்தப்பட்டது. கொரோனா(Covid-19) அனர்த்த விடுமுறை காலப்பகுதியில் மாணவர்கள் இழந்த கல்வியை ஓரளவேனும் குறுகிய கால இடைவெளியில் ஈடுசெய்யக்கூடியதாக இருந்தது.

மல்லிகை தோட்ட விவசாயிகளுக்கு விதைகள் வழங்கிவைப்பு / Seeds to Organic Agriculture Producers Club in Maskeliya

ஆழ் வாழ்தல் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மலையகத்தின் மஸ்கெலியா பிரதேசத்தில் வசித்துவரும் மல்லிகை தோட்ட விவசாயிகள் 20 பேருக்கு விதைகள் 10-05-2020 அன்று வழஙகப்பட்டது. இதற்கான நிதிப்பஙகளிப்பினை ஆழ வாழ்தல் அமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியிருந்தார். Seeds to Organic Agriculture Producers Club in Maskeliya. Seeds were given today on 10/05/2020 to 20 organic farmers from Maskeliya by Deep Global organization. Financial help for

தன்னிறைவு பொருளாதாரத்திற்கான ஊக்கியாக Deep Global / Promoting organic Farming to be self sufficient.

Deep Global தன்னார்வ தொண்டு நிறுவனமாது தாயகத்தில் மேற்கொண்டுவரும் சேவைகளில் மக்களிடத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவதும் மிக முக்கிய ஒன்றாகும். அந்த வகையில் இயற்கை விவசாய உற்பத்தியாளர் கழகம் இன்று(23-04-2020) மலையகத்தில் உள்ள அகரவத்தை தோட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாய துறையில் ஆர்வமுள்ள 35 விவசாயிகளை தெரிவுசெய்து முதற்கட்டமாக போஞ்சி விதைகள் கழகத்தின் செயலாளர் ம. இராஜரட்னம் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிதி பங்களிப்பை ஆள வாழ்தல் நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் திரு பொ.யேசுரட்னம் அவர்கள்

தாவடியில் உணவு வழங்கல் /Helping people during Corona lockdown.

#Corona #Covid-19 03.04.2020 அன்று யாழ் தாவடியில் 150 குடும்பங்களுக்கு இரவு உணவாக பாண் வழங்கப்பட்டது. மேலும் 5 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இவ் ஆத்மிக பணியை R.K Selvam ஆசிரியர் மற்றும் அவரது குழுவால் (ஆள வாழ்தல் அமைப்பு) ஏற்பாடு செய்யப்பட்டு தாவடி வேத விநாயகர் விளையாட்டுக் கழக இளையவர்களின் ஊடாக மக்களின் கரங்களுக்கு சேர்க்கப்பட்டது. அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். Helping people during Corona lockdown. Dinner was