மூன்று நவீன திறன் வகுப்பறைகள் வழங்கல்

21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கு தகவல் தெpழில்நுட்ப அறிவு முக்கியமானது. இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் தகவல் தொழில் நுட்பத்தினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டப்படுகின்றது. அந்த வகையில் Deep Global Srilanka(ஆழ வாழ்தல்) தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் மூன்று பாடசாலைகளுக்கு தலா ஒவ்பொரு திறன் வகுப்பறைகள்(Smart Class Rooms) அபிவிருத்தி செய்யப்பட்டு 23-03-2023 அன்று வழங்கப்பட்டது.