Deep Global தன்னார்வ தொண்டு நிறுவனமாது தாயகத்தில் மேற்கொண்டுவரும் சேவைகளில் மக்களிடத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவதும் மிக முக்கிய ஒன்றாகும். அந்த வகையில் இயற்கை விவசாய உற்பத்தியாளர் கழகம் இன்று(23-04-2020) மலையகத்தில் உள்ள அகரவத்தை தோட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாய துறையில் ஆர்வமுள்ள 35 விவசாயிகளை தெரிவுசெய்து முதற்கட்டமாக போஞ்சி விதைகள் கழகத்தின் செயலாளர் ம. இராஜரட்னம் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிதி பங்களிப்பை ஆள வாழ்தல் நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் திரு பொ.யேசுரட்னம் அவர்கள் செய்திருந்தார்.
இதன் மூலம் மலையக மக்களிடத்தில் விவசாயத்தினூடாக தன்னிறைவு பொருளாதாரத்தை காண்பதற்கான ஊக்கியாகவும் உதவும் கரஙகளாகவும் Deep Global மீண்டுமொருதடவை செயற்பட்டுவருவதை காணக்கூடியதாக இருந்தது.
35 farmers were selected from Agarawatte Estate area in Vaddavalai to form an ‘Organic Crops Producers Club’ as a cooperative society. They were given seeds by a Trustee of Deep global and it was handed by club secretary Mr M. Rajaratnam on 23/ 04/ 2020.