Deep Global தொண்டு நிறுவனத்தினால் வடக்கு, கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகள் போன்று மலையகத்தில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி நிலை மேல்நிலைக்கு கொண்டுவருவதற்கான அடித்தடம் பதிக்கப்பட்டுள்ளது.
Deep Global நிறுவனத்தினால் ஏற்கனவே மலையகத்தில் கல்வி கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் Deep Global இன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மலையக கல்வி நடவடிக்கையை மேம்படுத்த முதற்கட்டமாக ஒருதொகுதி புத்திஜீவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் மலையகத்தை சேர்ந்த 25 அதிபர்களும் ஏனைய சில புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் மலையகத்தில் கல்வி நிலை இன்று எவ்வாறு உள்ளது, கல்வியின் பாங்கு எவ்வாறு செல்கின்றது, காணப்படும் தடைகள் எவை, அவற்றை எவ்வாறு இனஙகாண்பது, அவற்றை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகள் எவை, வழஙகவேண்டிய உதவிகள் எவை என்ற கோணங்களில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் ஆனது பிரயோசனம் மிக்கதாக அமைந்ததுடன் கல்வி உயர்ச்சிக்கும் உறுதுணையாக அமைந்தது.