- Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரித்தானியா- யாழ் தீவக ஒன்றியத்தினால் “தீவகம்” எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலகவியலாளர் திரு. என்.செல்வராஜா அவர்களின் படைப்பான இந்நூலில் யாழ்ப்பாணத்தின் ஏழு தீவுகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது.
10-06-2018(ஞாயிற்றுக்கிழமை) பி.ப 03:00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கெளரவ முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், வைத்தியர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் போன்றோர் பங்குபற்றியிருந்தனர்.